நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு தீப கற்ப பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 இதில் உள் மற்றும் கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் உடையாள்ப்பட்டியில் 7 செ.மீ .மழையும், தஞ்சையில் 6 செ.மீ. மழையும் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: