பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம்; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்ணறனர். சீன பாதுகாப்புத்துறை, சுற்றுலாத்துறை, உள்துறைஅதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்ட சீன அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியா - சீனா இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பொருளாதார வளர்ச்சியை கொண்டுவரவும் இருநாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சீனாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி சீனா சென்றார்.

சீனாவில் உள்ள ‌ஷகான் நகரில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். ஏப்ரல் 27, 28 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சில புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த சந்திப்பை அடுத்து இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை சீன அதிபர் தற்போது ஏற்று கொண்டுள்ளார். பிரதமரின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் அக்டோபர் 11ம் தேதி முதல் 13ம் தேதிக்குள் இந்தியா வருவார் என்று கூறப்படுகிறது. இதற்காக பிரதமர் மோடி அக்டோபர் 10ம் தேதி சென்னை வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 11ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேரடியாக சென்னை வருகிறார்.

விமான நிலையத்தில் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடியே விமான நிலையத்துக்கு வந்து சீன அதிபரை வரவேற்பார் என்றும் கூறப்படுகிறது. வரவேற்பை முடித்து கொண்டு பிரதமர் மோடி, சீன அதிபர் மாமல்லபுரம் செல்கின்றனர். அங்கு நடக்கும் உச்சி மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு உறவுகளை மேம்படுத்தும் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சு நடத்துகின்றனர். பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை எதிரொலியாக மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சீன அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: