48000 ஊழியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் தசரா போனஸ் : தெலுங்கானா நிறுவனம் அதிரடி..!

ஹைதராபாத் : தெலுங்கானாவில் ஒரு நிறுவனம் தனது பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சத்தை போனஸாக வழங்க உள்ளது. தீபாவளி, தசரா பண்டிகை இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களாலும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுபவை. இப்பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என உற்பத்தி நிறுவனங்கள் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தெலுங்கானாவில் ஒரு அரசு நிறுவனம் தன் ஊழியர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு 1.01 லட்சம் ரூபாயை போனஸாகக் கொடுத்துள்ளது.

தெலுங்கனா அரசு நடத்தி வரும் SCCL என்ற நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 48 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த எஸ்.சி.சி.எல்.நிறுவனம்,  தெலுங்கானா அரசு மற்றும் மத்திய அரசுக்கு 51:49 பங்கு அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2018-2019ம் ஆண்டில் வருவாய் ரூ. 1765 கோடியாக இருந்தது. இந்த சூழலில் 5 ஆண்டுகளாக பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1.01 லட்சத்தை தசரா போனஸாக அளிப்பதாக தெலுங்கனா அரசு அறிவித்துள்ளது.

இதே போல் 2017-18 ம் ஆண்டில்,  நிறுவனத்தின் 27% இலாபம் தொழிலாளர்களுடன் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதன்படி  ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ. 60,369 போனஸாக வழங்கப்பட்டது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த வருடம் 40530 ரூபாய் அதிகமான போனஸ் தொகையைக் கொடுத்துள்ளது தெலுங்கானா மாநிலம். Singareni Collieries நிறுவனத்தின் வருவாய் கடந்த வருடத்தை விடவும் 28 சதவீதம் வளர்ச்சி அடைந்து சுமார் 1,765 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது. நாட்டில் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களை போல உழைத்ததாக அந்த நிறுவனத்திற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: