×

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : districts ,Kanchipuram ,Chennai Weather Center Thiruvallur ,Thiruvallur ,Chennai Weather Center , Thiruvallur, Kanchipuram, Heavy Rain, Chennai Weather Center
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...