இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் நிலவிவரும் நிலையில் அமெரிக்க- சீன துணை வர்த்தக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் சீன துணை வர்த்தக பிரதிநிதிகள் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் தொடர் வர்க்கப்போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு காலகட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் இவ்விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் சீன துணை வர்த்தக பிரதிநிதிகள் சுமார் இரண்டு மாத காலத்திற்கு பின்னர் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில், சீன துணை நிதி அமைச்சர் லியாவோ  மின் தலைமையிலான 30 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஜெப்ரி கெரிஷ் தலைமையிலான அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதிகள் குழுவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Advertising
Advertising

இதை தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட நிலையில், விவசாய பண்ணை பொருட்கள் குறித்து முக்கியாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா பீன்ஸ் உள்ளிட்ட பண்ணை பொருட்களின் கொள்முதலை அதிகரிப்பது தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் இரு நாடுகளுக்கும் இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள உயர்மட்ட வர்த்தக பேச்சுவார்த்தையில் எதிரொலிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Related Stories: