உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை 22 சதவீதமாக குறைக்க முடிவு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோவா: உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனம் மீதான விரியை 22 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்பான செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிறுவன வரி விகிதத்தை சட்டத்திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தொழில் உற்பத்தி துறையில் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு வரியை 15 சதவீதமாக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்படுவதாகவும், 2019 அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: