அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்து சென்றவர்கள் மீது மர்மநபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மர்மநபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த துப்பாக்கிசூடு சம்பவம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மளிகை அருகே நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மெட்ரோபொலிட்டன் போலீஸ் கமாண்டர் ஸ்டூவர்ட் எமர்மேன் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்யவில்லை என தெரிவித்தார். அதேசமயம், இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தின் நோக்கம் குறித்தும் இதுவரை தெரியவில்லை எனக்கூறினார்.

Advertising
Advertising

திட்டமிட்ட சம்பவமாக இது நடந்திருக்காது எனக் கூறிய அவர், சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் ஆகியோரை விசாரித்து வருவதாக தெரிவித்தார். இந்த துப்பாக்கிசூட்டில் காயமடைந்த 5 பேரில் இருவரின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் சிறிய காயங்களுடன் இருப்பதால் விரைவில் குணமடைவார்கள் என தெரிவித்தார். மேலும் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் இரண்டு மைல் (3 கி.மீ) தொலைவில் உள்ள கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக, ABC- என்ற தொலைக்காட்சியின் இணை நிறுவனமான WJLA-TV ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் என்ன என்பது, தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: