ஆசிய வாலிபால்: இந்தியா வெளியேறியது

டெஹ்ரான்: ஆசிய அளவிலான  ஆண்களுக்கான  வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா காலிறுதி சுற்றில் நடைப்பெற்ற 3 போட்டிகளிலும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது.ஈரான் தலைநகர் டெஹ்ரானில்  ஆண்களுக்கான 20வது ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. மொத்தம்  16 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டியில் இந்திய அணி  சி பிரிவில் இடம் பெற்றது. இந்தப் பிரிவில் 3ல் 2 போட்டிகளில் வென்று காலிறுதி சுற்றுப் போட்டிகளில் விளையாட தகுதிப் பெற்றது.காலிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா 0-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தொடர்ந்து ஈரானுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை 16-25 என்ற புள்ளி கணக்கில் எளிதில் இழந்தது. ஆனால் 2வது செட்டை 21-25 என்ற புள்ளி கணக்கில் போராடி இழந்தது.

தொடர்ந்து நடைபெற்ற 3 செட்டில் இந்தியாவின் கைதான் முதலில் ஓங்கியது. ஆனால் அதற்கு சமமாக வேகம் காட்டிய ஈரான் 3வது செட்டை 25-21 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியது. அதனால் 3-0 என்ற கணக்கில் ஈரான் வெற்றிப் பெற்றது. காலிறுதிச் சுற்றின் தனது கடைசிப் போட்டியில் நேற்று இந்தியா - கொரிய அணிகள்  விளையாடின. அந்த போட்டியையும் 1-2 என்ற செட்களில் கொரியாவிடம் இழந்தது.  அதனால் காலிறுதிச் சுற்றில் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றதால் இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது.

Related Stories:

>