ஜிஎஸ்டி கவுன்சில் இன்று ஆலோசனை

கோவா: பொருளாதாரத்தை மந்த நிலையில் இருந்து மீட்கவும், ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு தொழில்துறைகள் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் வரி குறைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 37வது கூட்டம் கோவாவில் இன்று கூடுகிறது. எனவே, வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி, ஓட்டல் அறைகளுக்கான வரிகள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  ஆனால், பெரிய அளவில் வரி குறைப்பு அறிவிப்புகள் இருக்காது என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: