×

கொச்சி மேம்பால ஊழல் வழக்கு முஸ்லிம் லீக் முன்னாள் அமைச்சரை கைது செய்ய போலீஸ் தீவிரம்: தலைமறைவானதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கொச்சி மேம்பால ஊழல் வழக்கில் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்ய  முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி பாலாரி வட்டத்தில் கடந்த  காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டது. தேசிய ெநடுஞ்சாலையில்  ரூ.39 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில  மாதங்களுக்கு முன் இந்த பாலத்தில் விரிசல் ஏற்பட்டன. பாலம் கட்டப்பட்ட 4  ஆண்டுகளுக்குள் விரிசல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விஜிலென்ஸ் விசாரணைக்கு கேரள பொதுப்பணித்துறை  அமைச்சர் சுதாகரன் உத்தரவிட்டார். மேலும், பாலத்தின் உறுதி தன்மையை  பரிசோதிக்கும் பொறுப்பு சென்னை ஐஐடி வல்லுனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பரிசோதனையில் பாலம் வலுவிழந்திருப்பது தெரிய வந்தது. லஞ்ச  ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் பாலம் கட்டியதில் ஊழல் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்போதைய பொதுப்பணித்தறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி சூரஜ் உட்பட 4  அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் அப்போதைய  பொதுப்பணித்துறை அமைச்சர் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இப்ராகீம்  குஞ்ஞுவிற்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த  சில நாட்களுக்கு முன் இப்ராகீம் குஞ்ஞுவிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர்  விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்  மூவாற்றுப்புழா விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் மேம்பால முறைகேட்டில்  முன்னாள் அமைச்சர் இப்ராகீம் குஞ்லுவுக்கு தொடர்பு உள்ளதாக ஐஏஎஸ் அதிகாரி  சூரஜ் கூறினார். மேலும் பல முக்கிய  ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து  இப்ராகீம் குஞ்லுவை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  அவர் தற்போது எம்எல்ஏவாக சபாநாயகரிடமும் கைதுக்கு அனுமதி கோரப் பட்டுள்ளது.இதற்கிடையே இப்ராகிம்  குஞ்ஞு நேற்று காலை முதல் திடீர் என மாயமானார். அவர் எங்கு இருக்கிறார்  என்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் ேபாலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : arrest ,Kochi ,Muslim League , Former minister of Muslim League, arrest, police
× RELATED டாஸ்மாக் டோக்கன் விற்ற வாலிபர் கைது