×

இன்னும் காத்திருப்பது ஏன்? உபி அரசுக்கு பிரியங்கா கேள்வி

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ள சட்டக் கல்லூரி மாணவி, அவரை உடனடியாக கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன்’ என நேற்று முன்தினம் எச்சரித்தார். இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் உபி மாநில பாஜ அரசு, காவல்துறையின் அலட்சிய போக்கினாலும், குற்றவாளிக்கு பாதுகாப்பு வழங்கியதாலும் என்ன விளைவுகள் ஏற்பட்டன என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். தற்போது, ஷாஜகான்பூர் வழக்கிலும் பாஜ அரசு, காவல்துறை அதே தவறை செய்கின்றன. பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு என்ன நேருமோ என்ற அச்சத்தில் உள்ளார். ஆனால், பாஜ அரசு இன்னும் எதற்காக காத்து கொண்டிருக்கிறது என்று புரியவில்லை,’ என கூறியுள்ளார்.

Tags : government ,Priyanka ,Uppi , Government,Uttar Pradesh, Priyanka
× RELATED தொழிலாளர்களுக்கு உதவினால் உபி.யில் சிறை: பிரியங்கா குற்றச்சாட்டு