கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி 6 நண்பர்கள் சேர்ந்து வாங்கிய டிக்கெட்டிற்கு 12 கோடி பரிசு

திருவனந்தபுரம்: கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான 12 கோடி கொல்லத்தைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்களான 6 நண்பர்கள் சேர்ந்து வாங்கிய டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு சார்பில் ஓணம் பம்பர் லாட்டரி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முதல் பரிசு 12 கோடியாகும். டிக்கெட் விலை 300. இந்நிலையில் லாட்டரி குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. முதல் பரிசு ஆலப்புழாவில் விற்பனையான டிஎம்160869 என்ற டிக்கெட்டிற்கு கிடைத்தது. இதையடுத்து முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி யார் என்று கேரளாவில் ெபரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் 12 கோடிக்கு சொந்தக்காரர்கள் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த 6 நண்பர்கள் என்று தெரியவந்துள்ளது. ரோணி, விவேக், ரதீஷ், சுபின், ராம்ஜி, ராஜீவன் என்ற இந்த 6 நண்பர்களும் சேர்ந்து இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். இவர்கள் கருநாகப்பள்ளியில் ஒரு நகைக்கடையில் பணிபுரிந்து வருகின்றனர். முதல் பரிசு 12 கோடி என்றாலும் வரி போக 7.56 கோடி கிடைக்கும்.

Related Stories: