×

ரியல் எஸ்டேட் துறையில் புதிய சாதனை மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகள் 111 கோடிக்கு விற்பனை

மும்பை: ரியல் எஸ்டேட் தொழில் சோதனையான காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கும் நிலையில் மும்பையின் ஒர்லி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் 111 கோடிக்கு விற்பனையாகியுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அபய் சோய் மற்றும் தருணா சோய் ஆகியோர் இந்த வீடுகளை வாங்கியுள்ளனர். அபய் சோய், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையை நிர்வகித்து வரும் ‘ரேடியண்ட் லைப் கேர்’ நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.

ஒர்லி, டாக்டர் அன்னி பெசன்ட் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ‘த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் அபார்ட்மென்ட்ஸ்’ என்ற கட்டிடத்தின் 36வது மற்றும் 37வது மாடியில் இந்த வீடுகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வீடும் 730.02 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அபய் சோய் அந்த வீட்டை 54 கோடிக்கும், தருணா சோய் 57.25 கோடிக்கும் வாங்கியுள்ளனர். ஆகஸ்ட் 19ம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் ஸ்டாம்ப் கட்டணமாக மட்டும் 6.50 கோடி செலுத்தியுள்ளனர்.

Tags : apartments ,Mumbai ,Worli , Family spends record,Rs 111 crore, two apartments ,Worli high-rise
× RELATED திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் ரூ.50...