இ-சிகரெட் தடை, பொருளாதாரம் குறித்த பெண் தொழிலதிபர் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் பத்திரிகையாளர் கேள்விகளுக்கும்  பதில் அளித்தார். அப்போது, இந்தியாவின் முன்னணி பார்மா நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா, டிவிட்டரில் அதிரடியாக பல கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில் இ-சிகரெட் தடை குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது ஏன்? இந்த அறிவிப்பை சுகாதாரத் துறை அமைச்சர்தானே வெளியிட்டிருக்க வேண்டும்?’ குட்கா போன்ற பொருட்களை எப்போது தடை செய்யப் போகிறீர்கள்?. நலிந்து வரும் இந்திய பொருளாதாரத்தை ேமம்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளீர்களா’ என சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தார்.பெண் தொழிலதிபரின் இந்த டிவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கிரணின் கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்துள்ள பதில்கள்: கிரண்ஜியின் கேள்வி தொடர்பாக சில விளக்கம் அளிக்கிறேன். அமைச்சரவை கூட்டம் தொடர்பான முடிவுகள் குறித்து அறிவிப்பதற்காக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இ- சிகரெட் தொடர்பான கொள்கை முடிவுகளில் அமைச்சர்கள் குழுவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அமைச்சர்கள் குழுவின் தலைவர் என்ற முறையில் இ-சிகரெட் தடை அறிவிப்பை நான் வெளியிட்டேன். மேலும், சுகாதாரத்துறை அமைச்ர் ஹர்ஷ் வர்தன் வெளிநாடு சென்றுள்ளதால் இந்த அறிவிப்பை நான் வெளியிட்டேன். இந்த பேட்டியின்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரும், சுகாதாரத்துறை அமைச்சக செயலாளரும் உடன் இருந்தனர். இ- சிகரெட் தொடர்பான விளக்கங்களை சுகாதாரத்துறை செயலர் அளித்தார். நிதியமைச்சராக நான் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: