மீன்சந்தை அமைத்து தருவதாக தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி : அமைச்சருக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பாலா சட்டப்பேரவை ெதாகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மீன்சந்தை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த மாநில மீன்வளத்துறை அமைச்சர் மெர்ஸி குட்டியம்மாவிற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள  மாநிலம் பாலா சட்டப்பேரவை தொகுதியில் வரும் 23ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜ  உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று  முன்தினம் இந்த தொகுதியில் கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்ஸி குட்டியம்மா  பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது  அவர், பாலாவில் விரைவில்  மீன்சந்தை அமைக்கப்படும் என்று கூறினார். இந்த அறிவிப்பு தேர்தல் நடைமுறை  விதிக்கு எதிரானது என்று கூறி, அமைச்சருக்கு எதிராக தேர்தல்  ஆணையத்திடம்  கேரள காங்கிரஸ்(எம்) சார்பில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து  தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக அமைச்சர் மெர்ஸி  குட்டியம்மாவுக்கு,  கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா  எச்சரிக்கை விடுத்தார்.  மீண்டும் தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும்  என்று அவர் எச்சரித்துள்ளார்.

Related Stories: