ஆந்திர மாநிலத்தில் அரசு டாக்டர்கள் கிளீனிக் நடத்த தடை : முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி

திருமலை: ஆந்திர மாநில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், தனியாக கிளீனிக் நடத்த தடை விதித்து முதல்வர் ஜெகன்மோகன் அதிரடியாக உத்தரவிட்டார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா ராவ் தலைமையில் குழு அமைத்தார். இந்த குழுவினர் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு மாநிலம் முழுவதும் மருத்துவ மற்றும் சுகாதார துறையில் 100 அம்சங்கள் கொண்ட மாற்றங்கள் செய்ய வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகனை தாடேப்பல்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து முதல்வர் ஜெகன்மோகன் கூறுகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அடிப்படை தேவைகளான மருந்துகள், கருவிகள், கழிவறையை தூய்மையாக வைத்திருப்பது. படுக்கைகள், ஆய்வகம் உட்பட வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு டாக்டர்கள் கிளீனிக் நடத்தவும் அதில் பணிபுரியவும் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி தனியார் கிளீனிக்குகளில் பணிபுரிந்தால் அந்த கிளீனிக்கின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். மேலும் அரசு டாக்டர்களுக்கு சம்பளம் உயர்வும் வழங்கப்படும்’ என அறிவித்தார்.

Related Stories: