அரசு போக்குவரத்துக் கழகத்தில் 6,283 பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன் 1,093 கோடி : முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6,283 பணியாளர்களுக்கு 1,093 கோடி  ஓய்வூதிய பணப்பயன்களை வழங்கிடும் அடையாளமாக, 9 ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்களுக்கான காசோலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 2017-18ம் நிதியாண்டில் 2147 கோடியே 39 லட்சம், 2018-19ம் நிதியாண்டில் 487 கோடியே 56 லட்சம் அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதியுதவி மூலம் மார்ச் 2018 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு சட்டரீதியான பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டரீதியான பணப்பலன்களான சேமநல நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வூதிய ஒப்படைப்பு, பங்களிப்பு ஓய்வூதியம் ஆகியவற்றினை வழங்கும் பொருட்டு அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் 1,093 கோடி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், மாநகர் போக்குவரத்துக் கழகம்,  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் -  விழுப்புரம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - சேலம்,   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கோயம்புத்தூர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - மதுரை,   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி  சார்ந்த ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான நிலுவையில் உள்ள பல்வேறு நிலுவைத் தொகைகளான வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் பணிக்கொடை வித்தியாசம் மற்றும்  நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 6,283 பணியாளர்களுக்கு 1,093 கோடிக்கான ஓய்வூதிய பணப்பயன்களை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 9 ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்களுக்கான காசோலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில்,  அமைச்சர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மின்சாரம் பாய்ந்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 3 லட்சம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் மகன் தீனா என்கிற திவா, காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் சிட்லபாக்கம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் சேதுராஜ் மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேற்கண்ட இரண்டு துயர சம்பவங்களில் உயிரிழந்த தீனா என்கிற திவா மற்றும் சேதுராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

Related Stories: