பொருளாதார மந்த நிலையால் இந்தியாவில் 7 கோடி பேர் வேலையிழப்பு: சிஐடியு மாநில மாநாட்டில் சௌந்தர்ராஜன் பேச்சு

சென்னை: பொருளாதார மந்த நிலையால், இந்திய அளவில் 7 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என சிஐடியு மாநில மாநாட்டில் சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் பேசினார்.இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் தொடங்கி, வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. காஞ்சிபுரம் அருணா மகாலில் தொடங்கிய மாநாட்டில் தூத்துக்குடியில் இருந்து  கொண்டுவரப்பட்ட  மாநாட்டு கொடியை  சிஐடியு  மாநில துணை தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன்  வழங்க, மாநில துணைத்தலைவர் தலைவர் எஸ்.ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.பொதுமாநாட்டுக்கு சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் எஸ்.கண்ணன் வரவேற்றார். சிஐடியு அகில இந்திய துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்பி, காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், தொமுச காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சுந்தரவரதன், மாவட்ட செயலாளர் இளங்கோவன்,  ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி,  எச்எம்எஸ் பொதுச் செயலாளர் எம்.சுப்பிரமணியம், ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் ஆதிகேசவன், ஏஐசிசிடியு தலைவர் எஸ்.எஸ்.குமார், ஏஐயுடியுசி பொதுச் செயலாளர் அனவரதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் சிஐடியு  மாநிலத் தலைவர் சவுந்தரராசன்  பேசியதாவது,  

பொருளாதாரத்தின் அரிச்சுவடி தெரியாதவர் நமது நிதி அமைச்சர் என்பது வேதனை. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டோல்கேட் விலை உயர்வு என பல லட்சம் கோடி ரூபாய், மக்களிடம் வரவேண்டிய பணம் தனி நபருக்குச் சென்றுள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள தொழில் மந்தத்தால், தமிழ்நாட்டில் 20 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை போய் விட்டது. இந்திய அளவில் சுமார் 7 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சிறு தொழில் செய்தவர்கள்  அனைவரும் தொழிலாளர்களாக மாறிவிட்டனர் என்றார்.

Related Stories: