×

தஞ்சை, அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் தற்காலிக மண்சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது: 40 கிராம மக்கள் அவதி

பெண்ணாடம்: இரண்டு மாவட்டங்களை இணைக்கும் தற்காலிக மண்சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 40 கிராமங்களை சேர்ந்த மக்கள் அவதி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த சவுந்திரசோழபுரம்-கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிகமாக செம்மண் கொட்டப்பட்ட மண் சாலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சாலையை அரியலூர் மாவட்டம்  கோட்டைக்காடு, ஆலத்தியூர் உட்பட 20 கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இதேபோன்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணாடம், சவுந்திரசோழபுரம் உட்பட 20 கிராம மக்கள் தஞ்சை, அரியலூர் செல்ல பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடலூர்-அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் தற்போது ரூ.11 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நேற்று பகல் 12 மணியளவில் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சவுந்திரசோழபுரம்-கோட்டைக்காடு இடையே இருந்த தற்காலிக மண் சாலை அடித்து  செல்லப்பட்டது. இதனால் இரு மாவட்டங்களை சேர்ந்த 40 கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : districts ,Ariyalur ,Thanjavur ,Avadi ,Villagers Avadi , Connecting ,districts , Tanjore ,Ariyalur, Avadi
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...