×

கரூர் அருகே பிரச்னைக்குரிய இடத்தில் தனியாருக்கு பட்டா வழங்கிய தாசில்தார் அதிரடி சஸ்பெண்ட்: கலெக்டர் நடவடிக்கை

கரூர்: வழக்கு நிலுவையில் இருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கியதாக தாசில்தார் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திருச்சியில் இருந்து கடந்த 1995ம் ஆண்டு கரூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கென தாந்தோணிமலை அருகில் பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட்டது. இதற்காக தனியாருக்கு சொந்தமான நிலங்களும்  கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட 6.75 ஏக்கர் நிலங்களுக்கு ரூ.5.14 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. ஒரு சிலருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இவர்களில் சிலர் இழப்பீடு கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த  வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பிரச்னைக்குரிய இடத்தில் ஒரு சிலருக்கு கரூர் தாசில்தார் அமுதா பட்டா வழங்கி உள்ளார். இதற்கு தலைமை சர்வேயர் சாகுல்அமீது, சர்வேயர் சித்ரா ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர். இது கலெக்டர் அன்பழகன் நடத்திய  ஆய்வில் தெரிய வந்ததது. இதையடுத்து தாசில்தார் உள்பட 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் நேற்று உத்தரவிட்டார்.

Tags : Dasildar Action Suspended ,Private Pattaya ,Collector's Action ,Karur ,Dasildar Action Suspender , problem , Karur, Private,Suspender,Collector's Action
× RELATED கணியம்பாடி பிடிஓ அலுவலகத்தில்...