கொடைக்கானலில் விதிமீறல் ஆலயங்கள் மீதான நடவடிக்கையை தடுக்கமுடியாது: எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

மதுரை: கொடைக்கானலில் விதிமீறலில் உள்ள மும்மதங்களின் ஆலயங்கள் மீதான நடவடிக்ைகயை எதிர்க்கும் மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியாகின.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஒவ்ெவாரு 5 ஆண்டும் மாஸ்டர் பிளான் மாற்றப்பட வேண்டும். 1993ம் ஆண்டின் மாஸ்டர் பிளான் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் மாற்றப்படவில்லை. 1999ல் தயாரிக்கப்பட்ட புதிய மாஸ்டர்  பிளானுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. சுற்றுலாப்பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கேற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அவசியம். ஆனால், விதிகளை மீறி கட்டிடம் கட்டியுள்ளதாக கூறி நோட்டீஸ்  அனுப்புவது, சீல் வைப்பது போன்ற பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, புதிய மாஸ்டர் பிளான் அமலாகும்வரை நோட்டீஸ் அனுப்பவும், சீல் வைக்கவும் தடை விதிக்க வேண்டுமென ஏற்கனவே பலர் தொடர்ந்த மனுக்கள் ஐகோர்ட்  கிளையில் தள்ளுபடியாகின.

இந்நிலையில் கட்டிட விதிமீறல் எனக்கூறி மும்மதங்களின் வழிபாட்டு தலங்களை பூட்டவோ, சீல் வைக்கவோ கூடாது. அகற்ற அனுமதிக்கக்கூடாது எனவும் சிலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன்,  ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:குறிஞ்சி ஆண்டவர் கோயில், சலேத் மாதா ஆலயம் போன்றவை நூற்றாண்டு பழமையானவை. இவற்றை காரணமாக கூற முடியாது. 1971ல் நகர் மற்றும் ஊரமைப்பு சட்டமும், 1972ல் மாவட்ட நகர்ப்புற விதியும் உருவாக்கப்பட்டது. எனவே,  இதற்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்க வேண்டியதில்லை. அதே நேரம் 1971-72க்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்களின் விதிமீறல்களை அனுமதிக்க முடியாது.சட்டத்தின்படியான காரணங்களை கூறாமல், நேரடியாக மனுதாரர்கள் உத்தரவிடக் கோருவதை ஏற்க முடியாது. இதை ஏற்றால், சட்டத்தை அமல்படுத்துவதை தடுப்பதைப் போலாகி விடும். அனுமதியற்ற விதிமீறல் ஆலயங்கள் மீதான  நடவடிக்கையை தடுக்க முடியாது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: