பள்ளிப்பட்டில் தொடர் மழை: 200 வருட ஆலமரம் முறிந்தது

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள 200 வருட பழமையான ஆலமரம் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்று படுகைகள், ஏரி, வரவு கால்வாய்களில் நீர்வரத்து துவங்கியுள்ளது. இத்தொடர் மழையால் விசைத்தறி நெசவு சம்பந்தமான பசை போடும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை முதல் தொடர் மழை காரணமாக, பள்ளிப்பட்டு-பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் உள்ள பெருமாநல்லூர் காலனி அருகே 200 வருட பழமையான ஆலமரம் இன்று அதிகாலை வேரோடு முறிந்து சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலிகள் ஏற்படவில்லை. இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் பொதுப்பணி மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து, ஜெசிபி இயந்திரம் முறிந்து விழுந்த ஆலமரத்தை அகற்றினர். இதன்பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Related Stories: