தொடர் மழையால் பெரம்பலூரில் 2 ஏரிகள் 100% நிரம்பியது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பருவத் தின் இறுதியில் தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் முதன்முறையாக கீழப்பெரம்பலூர், வடக்கலூர் ஏரிகள் 100 சதவீதக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் கிராம மக்கள்

மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் உள்ளன. ஊரக வள ர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 200க்கும் மேற்பட்ட குளம், குட்டை, ஊரணிகள் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத் தின் ஆண்டு சராசரி மழை யளவு 861மிமீ ஆகும். இதில், குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரியில் 26மிமீ, கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 99மிமீ, தென்மேற்குப் பருவமழை பெய்யும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங் களில் 270 மிமீ, மழை பெய்யும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 466மி.மீ மழை சராசரியாகப் பெய்ய வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை இல்லாதபடிக்கு கடந்தாண்டு 2018ல் மிகமிகக் குறைவாக 492.67மி.மீ மட்டுமே பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவானது. அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டு ஜனவரி தொடங்கி 8 மாதங்கள் ஆன நிலையில் சராசரியாக பெய்ய வேண்டிய 861 மி.மீ மழைக்கு பதில் 210 மி.மீ மழை மட்டுமே பதிவாகி 25 சதவீத மழை கூட பெய்யாதிருந்தது.

ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரை 395 மி.மீ மழை பதிவாக வேண்டும். ஆனால் இன்னும் 10 நாட்களே பாக்கியுள்ள நிலையில் அதில் 55 சதவீத மழையே பதிவாகியுள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட மிகக்குறைந்த மழை பதிவாகு மென அஞ்சப்பட்டது. இந்நிலையில், சற்று ஆறுத லாக தென் மேற்குப் பருவ மழை கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி 174 மி.மீ மழைபெய்தது. சராசரி மழையளவு 15.82 ஆகும். 13ம் தேதி 366 மிமீ மழை பெய்தது. சராசரி மழையளவு 33.27 ஆகும். 15ம் தேதி 101 மி.மீ மழைபெய்தது. சராசரி 9.18ஆகும். 16ம் தேதி 249 மி.மீ பெய்தது. சராசரி 22.64ஆகும்.

17ம் தேதி 228 மி.மீ மழை பெய்தது. சராசரி 20.73 ஆகும். இதன் காரண மாக சில ஏரிகளின் நீர்மட்டம் படி ப்படி யாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் 15ம் தேதியன்று 35 சதவீதமே நிரம்பியிருந்த கீழப் பெரம்பலூர் ஏரி, கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்வதால் நேற்று 100 சதவீதத்தை எட்டியது. அதே போல் வடக்கலூர் ஏரியும் 100 சதவீதத்தை எட்டியதால்நிரம்பி வழிகிறது. ஆய்குடி ஏரி 50 சதவீதக் கொள்ளளவை எட்டியுள்ளது. நிரம்பிய ஏரிகளை பார்த்து விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகள் பாசனவசதி பெறவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்புஏற்பட்டுள்ளது.

Related Stories: