பேனர் விவகாரத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதால் தன்னுடைய முழு ஆதரவு: ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: பேனர் விவகாரத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதால் அரசுத்துறைக்கும் போலீசாருக்கும் தன்னுடைய முழு ஆதரவும் உண்டு என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை சீரமைத்தாலே பல விபத்துகளை தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பேனர் அகற்றும் பணியில் உதவுவது அவசியம் என்றும் புகார்களுக்கு காவல்த்துறை கட்டுப்பட்டு அறை மற்றும் காவல்த்துறை எண்ணை பயன்படுத்துமாறு தெரிவித்தார்.

Advertising
Advertising

இதற்கிடையே திறந்தவெளியில் பேனர்கள், கட் அவுட் வைக்கும் விவகாரம் தொடர்பான பிரச்சனைகளை துணைநிலை ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த விவகாரத்தில் ஆளும் அரசை விட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், எங்களுக்கும் ஆளுநருக்கும் ஆயிரம் மாறுபட்ட கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்த பேனர் விவகாரத்தை முழுமையாக ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: