×

புதிய கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்  காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். வேலூர், கடலூர், மதுரை, மற்றும் நெல்லையில் ரூ.12.76 கோடியில் கட்டப்பட்ட 14  சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் வேலூர் மாவட்டம் பாச்சூர்  கிராமத்தில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள 2 சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலூர், மதுரை, நெல்லை மாவட்டங்களில் 11 சேமிப்புக்  கிடங்குகளை திறந்து வைத்தார்.

சென்னை, திருவள்ளூர், வேலூரில் ரூ.69.49 கோடியில் கட்டப்பட்டுள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர்  பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை மயிலாப்பூரில் 288 காவலர் குடியிருப்புகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 162 காவலர்  குடியிருப்புகள், 3 காவல்நிலையங்கள், 2 காவல்துறை இதர கட்டிடங்கள், 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டிடங்கள், அந்தத்  துறையினருக்கான 13 குடியிருப்புகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ , தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Tags : first ,buildings ,Palanisamy , Palanisamy was the first to open the new buildings with a video display
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...