ராசிபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்

நாமக்கல்: ராசிபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள அய்யம்பாளையம் அருந்ததியார் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம் மூலம் தொட்டி அமைக்கப்பட்டு அதில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தொட்டியில் கழிவுநீர் நிரம்பியதால் 15 நாட்களுக்கு மேல் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: