×

பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

டெல்லி: பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பாஜ தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசு கொண்டு வந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுவதாக குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில் பாஜ.வுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. எனினும் பிரதமரின் 69வது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய மம்தா, நேற்று அவரை டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, மேற்கு வங்கத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றுவதற்கு அனுமதி அளிக்கும்படியும், தனது மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் மோடியிடம் மம்தா பேசினார். இந்நிலையில் இன்று உள்துறை அமைச்சக அலுவலகத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். அமித்ஷாவை சந்தித்தபின் மேற்குவங்க முதல்வர் மம்தா செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்றபின் முதல்முறையாக அவரை சந்தித்தேன்.

மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என மாற்ற அமித்ஷாவிடம் நேரில் மம்தா கோரிக்கை வைத்துள்ளேன். அசாமில் தேசிய மக்கள் பதிவேடு வெளியிடப்பட்டு உள்ளது குறித்து அமித்ஷாவிடம் விவாதித்தேன். உண்மையான குடிமக்கள் அசாமில் வெளியிட்ட பதிவேட்டில் விடுபட்டு உள்ளதாக மம்தா புகார் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடுவது குறித்து அமித்ஷா ஏதும் பேசவில்லை. மேற்கு வங்கத்தில் டிஜிட்டல் ரேஷன் அட்டை வழங்குவது குறித்தும் விவாதித்ததாக மம்தா கூறினார்.

Tags : Mamta Banerjee ,Narendra Modi ,West Bengal ,Amit Shah , Amit Shah, Mamata Banerjee, Meet
× RELATED பாஜவில் சேராவிட்டால் கைது செய்வோம்...