தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு செப்.23ம் தேதி தொடங்கும்: சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்.. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு செப்.23ம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். முதன்மை செயலாளர், போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநருடன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் ராதாகிருஷ்னன் ஐ.ஏ.எஸ்., காவல் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்; தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்கு பேருந்து வசதி பற்றி விளக்கமளித்தார்.

தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு செப்.23ம் தேதி தொடங்கும். சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். ஆந்திராவிற்கு பேருந்துகள் மாதாவரத்தில் இருந்து இயக்கப்படும். திருவண்ணாமலைக்கு தாம்பரத்தில் இருந்தும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பகுதிகளுக்கு கே.கே.நகரில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அனைத்து தொலைதூர மாவட்டங்களுக்கும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வேலூர், ஓசூர், மாவட்டங்களுக்கு பூவிந்தமல்லியில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து நிலையங்களில் மொபைல் டாஸ்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தனியார் பேருந்துகளை விட தமிழக அரசின் பேருந்துகள் சிறப்பாக இயக்கப்படுகிறது; மக்கள் அரசு பேருந்துகளை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறினார். புதிய மோட்டார் வாகன சட்டத்தின் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் தமிழகத்தில் குறைக்கப்படும். அபராதத் தொகையை குஜராத், கர்நாடகம் போல் தமிழ்நாட்டிலும் குறைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. விதிகளை மீறுவோருக்கான அபராத தொகையை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் தொகை குறைக்கப்படும். அபராதத் தொகை குறைத்து வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி விரைவில் அரசாணை வெளியிடப்படும் என கூறினார்.

ஒய்வு பெற்ற 6,283 அரசு பஸ் ஊழியர்களுக்கு ரூ.1,093 கோடி ஓய்வூதிய தொகை தரப்பட்டது. 6,283 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் அடையாளமாக 9 பேருக்கு காசோலையை விஜயபாஸ்கர் வழங்கினார்.

Related Stories: