சென்னையில் அக்டோபர் 6ம் தேதி திமுக பொதுக்குழு: ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் வரும் 6-ம் தேதி காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என பேராசிரியர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

இந்த பொதுக்குழுவில் கழக ஆக்கப்பணிகள், கழக சட்டத்திட்ட திருத்தம், தணிக்கை குழு அறிக்கை தொடர்பாக பொதுக்குழுவில் விவாதிக்கப்படும். அதேபோல இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையையாக பொதுக்குழு கூடுகிறது.

Related Stories: