வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க மேட்டுப்பாளையம் சாலையில் கேமரா

குன்னூர்: குற்றச்சம்பங்கள், வனவிலங்குகளை கண்காணிக்க குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி துவங்கியது. சமவெளி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வரக்கூடிய முக்கிய சாலையாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை உள்ளது. அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் மலைப்பாதையில் ஏற்படும் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க முதல் முறையாக மாவட்ட காவல்துறை உத்தரவின் பேரில் வெலிங்டன் காவல்துறை சார்பில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.

குன்னூர் காட்டேரி பகுதி முதல் பர்லியார் வரை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் வன விலங்குகள் அடிக்கடி விபத்தில் பலியாகி வருகின்றன. இதைக்கண்காணிக்கும் வகையிலும், மலைப்பாதையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டால் அதை கண்காணிக்கும் வகையிலும் மராக்கள் பொருத்தப்படுகிறது.

Related Stories: