×

ஈரோடு வழியாக சென்ற கன்னியாகுமரி விரைவு ரயிலில் அனுப்பப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை

ஈரோடு: ஈரோடு வழியாக சென்ற கன்னியாகுமரி விரைவு ரயிலில் அனுப்பப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான டிவி, பிரிட்ஜ், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவில் இருந்து கன்னியாகுமரி செல்லக்கூடிய ஹிம்சாகர் 16318 எக்ஸ்பிரஸ் என்ற ரயிலில் தான் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 17- ம் தேதி ஜம்முவில் இருந்து புறப்பட்ட ஹிம்சாகர் 16318 என்ற எக்ஸ்பிரஸ் ரயில் , இன்று காலை 8.30 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதனையடுத்து பார்சல் பெட்டகத்தில் இருந்து ஈரோட்டில் இறக்க வேண்டிய பார்சல்களை இறக்குவதற்காக ஊழியர்கள் உள்ளே சென்றபோதுதான்,  இருக்கவேண்டிய பார்சல்கள் அனைத்தும் உடைந்து கிடப்பதும் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளது என தெரிய வந்தது. வெறும் அட்டைப்பெட்டிகள் மட்டும் கிடந்தன, அந்த அட்டைப்பெட்டிகளை மட்டும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் குறிப்பாக டிவி, லேப்டாப், பிரிட்ஜ், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பலலட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பொருட்களின் இன்வாய்ஸ் ஆனது கோவைக்கு அனுப்பப்பட்டிருப்பதால் அந்த இன்வாய்ஸ் பெறப்பட்ட பின்னர் தான் இந்த பொருட்கள் எங்கிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது இந்த பொருட்சாதனங்களின் மதிப்பு என்ன என்பது குறித்த முழுமையான தகவல் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இதே ரயிலில் டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட டிவி, லேப்டாப் உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதே ரயிலில் இது போன்ற ஒரு கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Kanyakumari ,Erode , Erode, Kanyakumari fast train, several lakhs of rupees, worth, goods and loot
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:...