ரேஷன் கடை ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை தீபாவளிக்குள் நிறைவேற்றப்படும் : துணை முதல்வர் வாக்குறுதி

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான கோரிக்கை தீபாவளிக்குள் தமிழக அரசு நிறைவேற்றித்aதரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன், பொதுச்செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது: ரேஷன் கடை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அரசாணை வெளியிட்டு ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து, ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய ஊதியம் சம்பந்தமான அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது.

ஊதியம் குறித்தான கோப்பு நிதித்துறையில் உள்ளதாகவும், நிதித்துறை அதனை பரிசீலனை செய்து அனுமதிக்குமேயானால் நியாயவிலை கடை ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார். எனவே, நிதித்துறையில் உள்ள கோப்பினை விரைந்து பரிசீலனை செய்து குறைந்த ஊதியத்தில் நிறைவான சேவை செய்து பொதுமக்களுக்கும், அரசுக்கும் பாலமாக உள்ள ரேஷன் கடை ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உடனடியாக நிதித்துறை அதிகாரியை அழைத்து விவரம் கேட்டதாகவும், வருகிற தீபாவளிக்குள் ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி தரும் என்று வாக்குறுதி அளித்ததாகவும் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: