சிட்லப்பாக்கம் மின் விபத்துக்கு லாரியே காரணம் : அமைச்சர் தங்கமணி சொல்கிறார்

சென்னை: ‘சிட்லப்பாக்கத்தில் நடந்த மின்விபத்திற்கு, அந்த வழியாக சென்ற லாரியே காரணம்’ என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இதுகுறித்து, சென்னை, மின்வாரிய தலைமைகத்தில் அவர் நேற்று அளித்த பேட்டி: சிட்லப்பாக்கம் பகுதியில் மின்கம்பம் விழுந்து சேதுராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். நான் அந்த பகுதியில் கேள்விப்பட்டது, லாரி ஒன்று அவ்வழியாக சென்றதாகவும் அது மரத்தின் மீது மோதியதில் மின்கம்பம் விழுந்துள்ளது. மின்வாரியம் கவனிக்கவில்லை என்று கூறுவது தவறு. பழுதடைந்த மின்கம்பங்கள் உடனடியாக மாற்றப்பட்டு விடும்.

விழுந்த கம்பம் சிறிதும் சேதமடையாமல் நன்றாக உள்ளது. காவல்துறையிடம் பேசி, சிசிடிவியின் உதவியுடன் லாரியை கண்டுபிடிக்கக் கூறியுள்ளோம்.  அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். போரூர் பகுதியில் நடந்த விபத்து மின்வாரியத்தால் நடந்தது என்று கூறுகிறார்கள். மாநகராட்சியின் மின்கம்பம்தான் பாதிக்கப்பட்டது. புகார் எங்கிருந்து வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எங்களுக்கு தெரியாமல் கேபிள் பதிப்பதால்தான் விபத்து நடக்கிறது. மின்விபத்துக்களால் ஏற்படும் இறப்பு குறைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: