அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் ஓ பிரயனை அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்த ஜான் போல்டன், கடந்த 11ம் தேதி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதிபர் டிரம்ப்பின் பல்வேறு ஆலோசனைகளுக்கு போல்டன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது பதவி  பறிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு 5 பேர் பட்டியலை டிரம்ப் தேர்வு செய்திருந்தார். அதிலிருந்து, பிணைக்கைதிகள் விவகார சிறப்பு தூதராக பணியாற்றி வரும் ராபர்ட் ஓ பிரையன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது டிவிட்டரில் நேற்று அறிவித்தார்.

Related Stories: