மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?

* பாஜ ஆட்சியை வீழ்த்த காங். வியூகம் * கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது

புதுடெல்லி: மகாராஷ்டிரா, அரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம், நாளை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் நவம்பர் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதே வேளையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை பதவிக்காலம் நவம்பர் 9ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம்  டிசம்பர் 27ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தற்போது 3 மாநிலங்களிலும் பாஜ ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கு வசதியாக, தேர்தல் ஆணையத்தின் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் குழு மும்பைக்கு சென்று சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இக் குழு  அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்தவுடன் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. அதேபோல், அரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடைசிக் கட்டத்தை எட்டி உள்ளன.

கடந்த 2014ம் ஆண்டில், மகாராஷ்டிரா மற்றும் அரியானாவுக்கான தேர்தல் அட்டவணை செப்.20ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அக்டோபர் 15ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. அக்.19ம் தேதி தேர்தல்  முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அக்.27ம் தேதி கொண்டாடப்படும் தீபாவளிக்கு முன்னதாக, மகாராஷ்டிரா மற்றும் அரியானா தேர்தல்களின் முடிவுகள் வெளியிடப்பட்டு, எந்தக் கட்சி ஆட்சியை அமைக்கும் என்பது தெரிந்துவிடும்.ஜார்க்கண்ட் மாநிலத்தை பொருத்தவரை, நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்ட தேர்தல்களை தேர்தல் ஆணையம் 2014ல் அறிவித்தது. முடிவுகள் டிசம்பர் 23 அன்று அறிவிக்கப்பட்டன.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று பிரதமர் மோடி கலந்து ெகாள்ளும் பாஜ கூட்டம் நடக்கிறது. இதில் மகாராஷ்டிரா உள்ளிட்ட தேர்தல் நடக்கும் மூன்று மாநிலங்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு பின்னர் நாளை தேர்தல் ஆணையம் தேர்தல் ேததி அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடக்க உள்ள 3 மாநிலங்களிலும் பாஜ ஆட்சியில் உள்ளது குறிப்பி டத்தக்கது. பாஜ ஆட்சியை அப்புறப்படுத்த, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தையும் நடக்கிறது. இதற்காக, காங்கிரஸ் தரப்பில் புதிய நிர்வாகிகள் சிலர்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - ேதசியவாத காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றி பெற்று இரு கட்சிகளும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று பீட் நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது கட்சியின் 5 வேட்பாளர்களை முதல்கட்டமாக அறிவித்தார். அதன்படி பார்லி தொகுதியில்  சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்சய் முண்டே, பீட் தொகுதியில் சந்தீப் ஷிர்சாகர், கெவ்ராலி தொகுதியில் விஜய்சிங் பண்டிட், மாஜல்காவ் தொகுதியில் பிரகாஷ் சோலங்கே, கைஜி தொகுதியில் நமிதா முந்தாடா ஆகியோர்  போட்டியிடுகின்றனர்.

Related Stories: