×

மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலை நேற்று ஒரே நாளில் 27 காசு வரை உயர்ந்தது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. சர்வதேச சந்தையில் சமீப நாட்களாக கச்சா எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரிய மாற்றம் ஏற்படாமல் இருந்தது. ஆனால், கடந்த 14ம் தேதி சவூதி அரபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 19.5 சதவீதம் அதிகரித்து, பேரல் 72 டாலரை நெருங்கியது. இது கடந்த 30 ஆண்டுகளில்  இல்லாத மிகப்பெரிய உயர்வாகும். உற்பத்தி மற்றும் சப்ளையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை இயல்பு நிலையை நோக்கி திரும்பி வருகிறது. நேற்று பேரல் 64.38 டாலராக குறைந்தது.

 இருப்பினும் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட திடீர் உயர்வை தொடர்ந்து, நேற்றும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளன. டெல்லியில் நேற்று பெட்ரோல் 25 காசு அதிகரித்து 72.42க்கும், டீசல் 24 காசு உயர்ந்து ₹65.82க்கும்  விற்கப்பட்டது. சென்னையில், பெட்ரோல் 27 காசு உயர்ந்து 75.26க்கும் டீசல் 26 காசு உயர்ந்து 69.57க்கும் விற்கப்பட்டது. கடந்த ஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலால் வரியை உயர்த்தியதால், பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு தலா 2.50 உயர்ந்தது. இதன் பிறகு ஒரே நாளில் 25 காசு வரை விலை  அதிகரித்துள்ளது.




Tags : rise , ederal budget,prices
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி