×

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு இடைக்கால இழப்பீடு

மதுரை: தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த சுந்தர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:என் மகள் திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு சட்டம் பயின்று வருகிறார். கடந்த ஜூலை 22ம் தேதி தவசெல்வன் என்பவர், என் மகளின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். படுகாயமடைந்த என் மகள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவருக்கு தரமான உயர்சிகிச்சை அளிக்கும் வகையில், திருச்சியிலுள்ள பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ₹8 லட்சம் இழப்பீடு வழங்கவும், மருத்துவ சிகிச்சைக்காக ₹5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இம்மனு நீதிபதி எம்.சுந்தர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட சட்ட மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் முன்னேற்றம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இடைக்கால இழப்பீடாக 1.75 லட்சத்தை செப். 23க்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப். 24க்கு தள்ளிவைத்தார்.

Tags : law student , Petrol, law student, interim compensation
× RELATED தீவிரம் புரியாமல் சாலையில் நடமாடுவதை...