இந்தியாவை இந்தி இணைக்கும் என்பது ஆபத்தான எண்ணம்: சிறையில் இருந்து ப.சிதம்பரம் டிவிட்

புதுடெல்லி: ‘இந்தி மட்டுமே இந்தியாவை இணைக்கும் என்பது ஆபத்தான எண்ணம்,’ என்று திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்  தனது குடும்பத்தினர் மூலம் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: இந்தி மட்டுமே இந்தியாவை இணைக்கும் என்ற ஆபத்தான எண்ணம் மக்கள் மத்தியில் பரப்பட்டு வருகிறது. தமிழர்கள் மட்டுமல்ல, பிற மொழி பேசுபவர்களும் இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மொழிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்கு ஆதரவளிக்கிறோம். ஆனால், இந்தி மட்டுமே நாட்டு மக்களை இணைக்கும் என்பதை ஏற்று கொள்ள மாட்டோம்,’ என கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: