சிறையில் சிதம்பரத்துடன் ஆசாத், படேல் சந்திப்பு

புதுடெல்லி: திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமத் படேல் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ.யால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கடந்த 5ம் தேதி முதல் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தனது 74வது பிறந்தநாளை கூட அவர் சிறையில் தான் கொண்டாடினார். இந்நிலையில், ப.சிதம்பரத்தை காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்கள் நேற்று சந்தித்தனர். குலாம் நபி ஆசாத், அகமத் படேல் ஆகியோர் நேற்று சிதம்பரத்தை சிறையில் சந்தித்து பேசினார்கள். தற்போதைய அரசியல் சூழல், காஷ்மீர் விவகாரம், வரவுள்ள தேர்தல்கள் மற்றும் நாட்டின் பொருளாதார சூழல் உள்ளிட்டவை குறித்து சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் குலாம்நபி, அகமத் படேல் ஆகியோர் விவாதித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: