‘ஹவ்டி எகானமி?’ ராகுல் காந்தி கிண்டல்

புதுடெல்லி: ‘‘பொருளாதாரம் எப்படியிருக்கு? நன்றாக இருப்பதுபோல் தெரியவில்லையே?’’ என பிரதமர் மோடியை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார். அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ‘ஹவ்டி மோடி’ என்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்புடன் கலந்து கொள்கிறார். இதில் 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். இதனால் ‘ஹவ்டி மோடி’ என்ற ஹேஸ்டாக் டிவிட்டரில் பிரபலமாகியுள்ளது. இதை வைத்து ‘‘ஹவ்டி எகானமி மோடி? நன்றாக இருப்பதுபோல் தெரியவில்லையே’’ என டிவிட்டரில் இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை குறித்து ராகுல் கிண்டல் செய்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: