மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் பல்லாரி விலை எகிறியது: கிலோ ரூ.35க்கு விற்பனை

மதுரை: சின்ன வெங்காயத்திற்கு இணையாக பல்லாரி வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.35 என பல்லாரி விற்பனையானது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, மேட்டுபாளையம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. சென்ட்ரல் மார்க்கெட்டில் இன்றைய காலை நிலவரப்படி காய்கறிகளின் வரத்து ஓரளவு இருந்த போதிலும்,  தேவை அதிகமானதால், விலை உயர்வாக இருந்தது. இது குறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறுகையில், ‘இன்று புராட்டாசி மாதம் பிறந்துள்ளதால், காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் விலை ஓரளவு அதிகரித்துள்ளது. அதே நேரம் வாழை இலை விலை கடந்த வாரத்தைவிட சற்று குறைந்தாலும், உயர்வாகத்தான் உள்ளது. முக்கியமாக பெரிய வெங்காயமான பல்லாரி விலை சின்ன வெங்காயத்தின் விலைக்கு இணையாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.20க்கு விற்பனையான பல்லாரி தற்போது ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்து வருவதால் இந்த விலை ஏற்றம். இந்த மாதம் பெரும்பாலான மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பார்கள் என்பதால், போகப்போக காய்கறிகளின் விலை அதிகரிக்கும்,’ என்றார்.

இன்று பட்டர்பீன்ஸ், சோயா, பச்சைபட்டாணி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் அவற்றின் விலை சற்று குறைந்துள்ளது. இன்றைய விலை விபரம் (ஒரு கிலோ)  கத்திரிக்காய் ரூ.18, தக்காளி ரூ.10, பச்சை மிளாகாய் ரூ.25, பல்லாரி ரூ.35, சின்னவெங்காயம் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.20, சேனைக்கிழங்கு ரூ.40, கருணைக்கிழங்கு ரூ.25, சேம்பு ரூ.30, பீன்ஸ் ரூ.40, கேரட் ரூ.20, காளிப்பிளவர் ஒரு பூ ரூ.20, நூக்கல் ரூ.20, டர்னிப் ரூ.25, பட்டர் ரூ.120, சோயாபீன்ஸ் ரூ.90, பச்சை பட்டாணி ரூ.80,

அவரை ரூ.20, பீட்ரூட் ரூ.20, முள்ளங்கி ரூ.15, வெண்டைக்காய் ரூ.18, பூசானிக்காய் ரூ.12, முருங்கைகாய் (கிலோ) ரூ.30, முட்டைகோஸ் ரூ.15, பச்சைமொச்சை ரூ.30, சவ்சவ் ரூ.15, கருவேப்பிலை ரூ.25, மல்லி ரூ.15, புதினா ரூ.25, இஞ்சி ரூ.175, புதிய இஞ்சி ரூ.50, கோவைக்காய் ரூ.25. 200 வாழை இலை உள்ள கட்டு கடந்த வாரம் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ.500 குறைந்து ரூ.ஆயிரம் முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: