×

இந்தி விவகாரம்: தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன்.. அமித்ஷா விளக்கம்

இந்தி விவகாரம்: தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தி மொழி தினத்தையொட்டி அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன், என கூறியிருந்தார்.

அமித்ஷாவின் இந்த இந்தி திணிப்பு குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கருத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இந்தியை திணிப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்தி குறித்த கருத்துக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை.

நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக உள்துறை அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். நான் எப்போதும் சொல்வது போல, இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும்; தனது தாய்மொழியில் படிக்கும் போதுதான் ஒரு குழந்தையால் நன்றாக படிக்க முடியும். 2-வது மொழி ஒன்றை கற்க வேண்டும் என்றால் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்றே கூறினேன். இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன் நான். நாட்டின் பொது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று விருப்பம் மட்டுமே தெரிவித்தேன்.


Tags : Amit Shah Explanation ,Amit Shah , Hindi, Mother Tongue, Amit Shah
× RELATED ‘நான் இந்து மதத்தை பின் பற்றுபவர்’...