×

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்திக்கொள்ளும் செயலி மூலம் 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பயன்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்

சென்னை: வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரிபார்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் தங்களது விவரங்களைத் திருத்தி பயனடைந்துள்ளனர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனரோடு ஆலோசணை மேற்கொண்டு வருகிறோம்.

மகளிர் குழுக்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த இரண்டு பேருக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து மற்ற ஊழியர்களின் பெயர்களைத் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் 18 ஆயிரம் பேர் பெயர் திருத்தம் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்திக்கொள்ளும் செயலி மூலம் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பெயர் மற்றும் முகவரிகளைச் சரிபார்த்துள்ளனர் என்று சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Election Officer , 2 Lakhs 33 Thousands, Benefit, Voter List, Voters, Amendment, Processor
× RELATED தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா?.....