பிரதமர் மோடியுடன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு: பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்து ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்க மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். மோடியை சந்தித்த போது, இனிப்புகளையும், குர்தாவையும் மம்தா பானர்ஜி பரிசாக வழங்கினார்.  இதனையடுத்து மேற்கு வங்கத்துக்கான மத்திய நிதி ஒதுக்கீடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை பற்றி மோடியுடன் ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, ரயில்வே ஆகியவை குறித்தும் பேசினார்.

மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார்.  உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் அரசியல் ரீதியாக கடுமையாக மம்தா பானர்ஜி சமீப காலமாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. டெல்லியில் பிரதமரை சந்தித்தவுடன் மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது; மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது குறித்து பிரதமருடன் விவாதித்தேன். மேற்கு வங்கத்தில் ரூ.13,000 கோடி முதலீடு செய்யப்படுவதாக கூறிய மம்தா பானர்ஜி, பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்தும் பிரதமரிடம் விவாதித்தாகவும் அவர் கூறினார். மேற்குவங்க மாநிலம் தொடர்பாக 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். பின்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்கினால் அவரையும் சந்திக்க உள்ளேன் என்று அவர் கூறினார்.

Related Stories: