திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழு: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அறங்காவலர் குழுவில் இடம்

ஆந்திரா; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழு தமிழகத்தின் சார்பில் 4 பேருக்கு வாய்ப்பு அளித்து ஆந்திர அரசு அரசனை ;வெளியிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 28 உறுப்பினர்களை கொண்ட தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி, இந்தியா சிமெண்ட் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், உடுமலை எம்எல்ஏ  குமரகுரு, டாக்டர் நிச்சிதா முத்தரப்பு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரையும் சேர்த்து 29 பேர் அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அரசாணையை ஆந்திர அரசு இன்று வெளியிட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது புட்டா சுதாகர் ராவ் தலைமையில் இருந்த அறங்காவலர் குழு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கலைக்கப்பட்டது. மூன்று மாதங்களாக அறங்காவலர் குழு நியமிக்கப்படாமல் இருந்ததால் தற்போது தேவஸ்தானத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை.

விரைவில் புதிய அறங்காவலர் குழு கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: