பாகிஸ்தானில் இந்து பெண் பல் மருத்துவ மாணவி கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி போராட்டம்

கராச்சி: பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் கொல்லப்பட்டதற்கு எதிராக கராச்சி உள்ளிட்ட நகரங்களில் பரவலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. நம்ரிதா சாந்தினி என்பவர் பாகிஸ்தானில் கோட்கி நகரை சேர்ந்தவராவார். இவர் பல் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது விடுதி அறையில் கதவு வெளியே மூடப்பட்டிருந்த நிலையில் கழுத்தில் துணியால் இறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் மற்றும் அதிகாரிகள் சாந்தினி மரணம் தற்கொலை என்று தெரிவித்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சாந்தினியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். சாந்தினியின் உடற்கூறு ஆய்வு சோதனையின் முதற்கட்ட முடிவில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளம் இருப்பதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளது இந்த வழக்கில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சாந்தினியின் சகோதரர் விஷால் சுந்தர் கூறும்போது, இது தற்கொலை அல்ல தற்கொலைக்கான காயங்கள் வேறு மாதிரியானவை. எனவே அவரது கழுத்திலும், கையிலும் சில வேறுப்பட்ட காயங்களை நான் பார்த்தேன் என கூறினார். இவரது மரணத்தின் உண்மையை கண்டறிந்து, உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்தி கராச்சி உள்ளிட்ட நகரங்களில் போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Related Stories: