சென்னை போட்டோகிராபருக்கு நாசா விருது!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

Advertising
Advertising

இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜூலை 22ம் தேதி மதியம் சந்திரயான் 2 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தன. இந்நிலையில், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த சந்திரயான் 2 விண்கலம் மேகக்கூட்டத்தை கிழித்துக்கொண்டு வான்பரப்பை விட்டு வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. இந்த கடைசி நிமிட நிகழ்வை பலர் போட்டோ எடுத்திருந்தாலும், நீரஜ் லாடியாவின் போட்டோவிற்கு அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, ‘இன்றைய நாளின் வானியல் போட்டோ’ என்ற பெயரில் விருது வழங்கி அதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

ஸ்பேஸ் சென்னை என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ள லாடியா, சந்திரயான் 2 ஏவப்படும் நிகழ்வை படம்பிடிக்க, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலிகாட் ஏரியில் தனது குழுவினருடன் இருந்துள்ளார். ஒவ்வொரு வானியல் புகைப்படக் கலைஞருக்கும், நாசாவின் இன்றைய நாளின் வானியல் போட்டோ விருது பெறுவது என்பது வாழ்நாள் கனவாகவே இருக்கும். விருது பெறுவதைப் பற்றிக் கூறும்போது அவர், ‘‘நான் இந்த வானியல் புகைப்படத்துறையில் 8 ஆண்டுகளாக உள்ளேன். சந்திரயான் 2 வளிமண்டலத்தில் நுழையும் நிகழ்விற்காக காத்திருந்தேன். அதற்கு ஒளியும் எனக்கு கைகொடுக்கவே, எனது கேனான் 700 டி கேமராவின் மூலம் பல போட்டோக்களை எடுத்தேன். அதனை, நாசாவின் பார்வைக்கு அனுப்பியிருந்தேன். எனது படத்திற்கு நாசாவின் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது இந்த நாளை நிகழ்வை என்றைக்கும் மறக்க மாட்டேன்’’ என்று நீரஜ் லாடியா’’ தெரிவித்துள்ளார்.

Related Stories: