ராமநாதபுரம் அருகே மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி!

குமரி: ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் மத்திய கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, மோப்ப நாய் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் குழுவுடன் திருவாடனை போலீசார் கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருப்பாலைக்குடியில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு கிளை வங்கி அமைந்துள்ள பகுதி வழியாக சென்ற பொதுமக்கள், வங்கியின் வெளிப்புற மற்றும் உட்புற பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் திருப்பாலைக்குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்தனர். வங்கியின் வெளிப்புற மற்றும் உட்புற கதவுகள் கடப்பாரையால் உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து, திருவாடனை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ்-க்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.  இதையடுத்து, தடயவியல் மற்றும் மோப்ப நாய் உதவியோடு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வங்கியில் மர்மநபர்கள் திருடி சென்றனரா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, வங்கியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் குறித்து தகவல்கள் பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. அவர்களை பிடித்தால் மட்டுமே, கொள்ளை சம்பவம் குறித்து முழுமையான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கியின் அருகில் அமைந்துள்ள கடைகள் வீடுகளிலும் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: