×

அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம் : பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

சென்னை: பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. காலதாதமின்றி அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளது. சுகாதாரம், கல்வி பணிகளை செய்ய விரும்பும் என்.ஜி.ஓ.க்களுக்கு அனுமதி வழங்க தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். பாட வேளை, தேர்வு காலம் ஆகியவை பாதிக்காத வகையில் தன்னார்வலர்களை அனுமதிக்கலாம் என்றும் பள்ளிகளில் பணிகளை மேற்கொள்ள அணுகும், தொண்டு நிறுவனங்கள் பற்றி தலைமை ஆசிரியர்கள் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புதிதாக ஆசிரியர்களை நியமிக்க தடை

அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கொண்டு காலியிடங்களை நிரப்ப அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏதும் ஏற்படகூடாது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : NGOs ,government schools ,Schools ,Primary Education Officers , School Education, Schools, Development Services, NGOs, Primary Education Officers
× RELATED அரசு பள்ளிகளை தொடர்ந்து தனியார்...