×

மதுரை அருகே கொலை செய்து உடல் வீச்சு சென்னை கார் டிரைவர் கொலையில் பெண் உள்பட 3 பேரை பிடிக்க தீவிரம்: செல்போன், சிசிடிவி பதிவு மூலம் விசாரணை

சென்னை: சென்னை அசோக்நகர் 30வது ெதருவை சேர்ந்தவர் சுந்தர்(45). தொழிலதிபரான இவர், சொந்தமாக இனோவா கார் வைத்துள்ளார். இவர் ஓய்வு நேரங்களில் காரை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில்  வாடகைக்கு விட்டு வருகிறார். கடந்த 5ம் தேதி குரோம்பேட்டையை ேசர்ந்த 3 பேர் திருச்சி, குற்றாலம் செல்ல காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். சுந்தர், கார் டிரைவர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த நாகநாதன்(54) என்பவரிடம் காரை கொடுத்து  அனுப்பி வைத்தார்.கடந்த 7ம் தேதி இரவு கார் சென்னைக்கு வர வேண்டும். ஆனால் நாகநாதன் 10ம் தேதி வரை சென்னைக்கு திரும்பவில்லை. அவரையும் தொடர்பும் கொள்ள முடியவில்லை. இதனால் சுந்தர் கடந்த 10ம் தேதி அசோக் நகர் காவல் நிலையத்தில்  நாகநாதனை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார்.அதன்படி அசோக்நகர் போலீசார் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து மாநில குற்ற ஆவண காப்பக போலீசார் உதவியுடன் தேடிவந்தனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டம்பட்டி என்ற இடத்தில் சாலையோரத்தில்  55வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதர் அருகே  உள்ள பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி  போலீசார் உடலை கைப்பற்றி அங்க அடையாளங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து மாநிலம் முழுவதும் உள்ள காணாமல் போன நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சென்னை அசோக் நகர் காவல்நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நாகநாதன் புகைப்படத்துடன் ஒத்துப்போனது. இதையடுத்து சம்பவம் குறித்து கொட்டம்பட்டி போலீசார் அசோக்நகர் போலீசாருக்கு தகவல்  கொடுத்தனர். அதன்படி அசோக் நகர் போலீசார் நாகநாதன் உறவினர்களுடன் மதுரைக்கு சென்று உடலை பார்த்த போது, கொலை செய்யப்பட்ட நபர் நாகநாதன் தான் என்று உறுதியானது.மேலும் சுற்றுலா செல்வதாக அழைத்து சென்ற பெண் உட்பட 3 நபர்கள் நாகநாதனை ெகாலை செய்து விட்டு காருடன் மாயமானது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு நாகநாதனை  சுற்றுலாவுக்கு அழைத்து சென்று மர்ம நபர்கள் கொலை செய்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காருக்கு பதிவு செய்த செல்போன் எண்ணை  வைத்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளிகள் திட்டமிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் ெசய்து காரை வாடகைக்கு எடுத்து ெசன்றுள்ளனர்.  இதனால் செல்போன் சிக்னல் மற்றும் குரோம்பேட்டையில் அவர்கள் காரில் ஏறிய பகுதியில்  உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாகநாதனுக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம் என்பதால் அவரது  உடல்  பிரேத பரிசோதனை முடிந்த நாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்று இன்று அடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,car driver ,Madurai Madurai , Body massacre ,Madurai,including woman, cell phone, CCTV registration,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...